தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் நாட்டுடமையாக்கப்படும்: இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் கைப்பற் றப்பட்ட படகுகள் நாட்டுடமையாக் கப்படும் என அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள கீரியங் கள்ளி என்னும் இடத்தில் மீனவர் களுக்கு படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மகிந்த அமரவீர பேசியதாவது:

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த தமிழக மீனவர்களின் படகுளைத் திருப்பி வழங்காததால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவது கடந்த ஆண் டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக மீனவர் களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், தளவாடங்கள் திருப்பி அளிக்கப்படமாட்டாது. ஆனால், இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து பாம்பன் மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பர்ணாண்டோ கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரி னால் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாண தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்திய அரசு ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகளைக் கடந்த ஏப்ரல் மாதம் அளித்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப் பட்ட படகுகளை நாட்டுடமை யாக்குவோம் என்று இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள் மீட் டுத்தரப்பட்டன. இலங்கை கடற் படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு முதல்வராக ஜெய லலிதா இருந்தபோது நிவாரணம் வழங்கப்பட்டது. பாஜக அரசு இனி யும் தாமதிக்காமல் படகுகளை மீட்டுத் தரவேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

52 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்