டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் எழுதவில்லை.

தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (நவ.19) நடைபெற்றது. காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. குரூப் - 1 தேர்வை எழுத 3,22,414 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,90,957 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 1,31,457 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதன்படி 59 சதவீதம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 40 சதவீத பேர் தேர்வை எழுதவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

க்ரைம்

41 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்