கலையை பற்றி தெரியாதோருக்கு `கலைமாமணி' விருது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

By செய்திப்பிரிவு

மதுரை: கலையைப் பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு ‘கலை இளமணி', 19 முதல் 35 வயதுவரை ‘கலை வளர்மதி', 36 முதல் 50 வயது வரை ‘கலை சுடர்மணி', 51முதல் 60 வயது வரை ‘கலை நன்மணி', 61 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘கலை முதுமணி' விருதுவழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை.

சென்னையில் 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.2.2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத நபர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர்மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தகுதியில்லாதோருக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்பப் பெறக்கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுதியில்லாதோருக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? விருதுக்கு எவ்வாறு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்? விருதுகளுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது? கலைகள் பற்றிதெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

கலைத் துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருது கலைமாமணி விருது. தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது. 2021-ல்2019-2020 ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கியது குறித்தும், தற்போது வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா, கலைத்துறைச் செயலாளர், இயல், இசை, நாடகமன்றத் தலைவர், உறுப்பினர் செயலர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையைநவ.28-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

26 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்