பழைய ஓய்வூதிய திட்டம்: வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக மீண்டும் பழைய ஓய் வூதிய திட்டத்தை செயல்படுத்து வதற்கு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார்.

இதன்படி, முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுநர் குழு கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அமைக் கப்பட்டது. பரிந்துரைகளை அளிப்பதற்கான இந்தக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஜூன் 26-ம் தேதி முடிந்ததையடுத்து, அதன் பதவிக் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, அக்குழு அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. ஓய்வூதிய ஆணையமும் அக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக தகவல்களை கேட்டுப் பெற்றது. இக்குழுவின் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி நிறைவுற்றது.

இந்நிலையில், ஓய்வூதிய திட் டத்தை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க நிபுணர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

உலகம்

10 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்