திருவள்ளூரில் 50 பவுன் கொள்ளை 500 ரூபாய் நோட்டுகள் என்பதால் ரூ. 1 லட்சத்தை விட்டுச் சென்றனர்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது. திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பூங்காவனம் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி செல்வம்(37). ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரியான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு திருநின்றவூர் சென்றார். பின்னர் அனைவரும் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. அதேநேரம், ரூ.95 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போகவில்லை. அவை தடைசெய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக இருந் ததால், அவற்றை கொள்ளையர்கள் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸார் சம்பவம் இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். திருவள்ளூர் எஸ்பி சாம்சன், கூடுதல் எஸ்பி ஸ்டாலின் ஆகியோரும் வந்து விசாரித்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

5 பேர் கைது

திரூப்போரூர் அடுத்த ஈச்சங் காட்டைச் சேர்ந்தவர் நிர்மலா. தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து, வீடு திரும்பிக்கொண் டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில், காயார் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், விஜய் ஆகியோர், செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்த 3 பேரையும் போலீ ஸார் கைது செய்தனர்.

இதேபோல், இருசக்கர வாகன திருட்டு வழக்கு தொடர்பாக, தண்டலத்தைச் சேர்ந்த ஏழுமலை, பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

இந்தியா

48 mins ago

ஓடிடி களம்

49 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்