சாத்தையாறு அணை நிரம்பியதால் மதுரை மாட்டுத்தாவணி குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்

By செய்திப்பிரிவு

சாத்தையாறு அணை நிரம்பி யதால், மதுரை மாட்டுத்தாவணி பகுதி குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. கால்வாயை மூழ் கடித்து தண்ணீர் செல்வதால் 400 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக் கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சாத்தையாறு அணை பகுதியில் 39 மி.மீ. மழை, புலிப்பட்டியில்- 85 மி.மீ. மழையும் பெய்தது. அதனால் சாத்தையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 29 அடி. இதில் 27 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுப்பணித் துறையினர் கால்வாயில் உபரி நீரை திறந்து விட்டனர்.

இந்த தண்ணீர் பல்வேறு கண்மாய்கள் வழியாக நேற்று மதுரை மாட்டுத்தாவணி சம்பக்குளம் கால்வாய்க்கு வந்தது. இந்த கால்வாயில் கொள்ளளவைத் தாண்டி தண்ணீர் வந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதுபோல், கொடிக்குளம் கண்மாய், உத்தங்குடி கண்மாயும் நிரம்பி அங்கிருந்து உத்தங்குடி, மீனாட்சிமிஷன் மருத்துவமனை வழியாக மாட்டுத்தாவணிக்கு வந்த கால்வாயிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த கால்வாய் தண்ணீர் மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர், ஆதி ஈஸ்வரன் நகர், பொன்மேனி நகர் ஆகிய குடியிருப்புகளை சூழ்ந்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் நேற்று காலை முதல் மக்கள் வீடுகளை விட்டு வெளி யேற முடியாமல் தவித்தனர்.

மாட்டுத்தாவணி-மேலூர் சாலையில் இடதுபுறமாக இருந்த தனியார் நிறுவனங்கள் உள்ளேயும் வெள்ள நீர் புகுந்தது. கொடிக்குளம், உத்தங்குடி கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீரும், சாத்தையாறு அணையில் இருந்து வந்த சம்பக் குளம் கால்வாய் தண்ணீரும் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே சேர்ந்து ஆறு போல் வண்டியூர் கண்மாய்க்கு பெருக்கெடுத்து ஓடியது.

இதுகுறித்து ஆதி ஈஸ்வரன் நகரைச் சேர்ந்த ரவி கூறுகையில், இந்த காலக்கட்டத்தில் மழை பெய்யும் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். சாத்தையாறு அணை நிரம்பினால் அங்கிருந்து மாட்டுத்தாவணி பகுதிக்குதான் தண்ணீர் வரும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டது. பொதுப்பணித்துறை கால்வாய்களை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதுபோல், மாட்டுத்தாவணி - மேலூர் சாலையில் உத்தங்குடி - வண்டியூர் கண்மாய் செல் லும் கால்வாயில் தனியார் நிறுவனங்களுக்கு கால்வாய் குறுக்கே பாலம் கட்ட வழிநெடுக அனுமதி வழங்கி உள்ளனர். அவர்கள் கால்வாயை ஆக்கிரமித்து அதன் அகலத்தை சுருக்கி பாலத்தை கட்டி விட்டனர்.

அதனால், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆட்சியர் ஆய்வு செய்துஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்க வேண்டும். கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி வழங்கக்கூடாது,’’ என்றார்.

கால்வாய் உடைப்பு: வண்டியூர் பகுதியிலுள்ள சிவசக்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சாத்தையாறு, உத்தங்குடி கண் மாயில் இருந்து வந்த தண்ணீரால் வண்டியூர் கண்மாய் மறுகால் பாய்ந்து, உபரி நீர் வைகை ஆற்றுக்கு சென்றது. கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் நேற்று முன்தினம் இரவு உபரி நீர் அதிகமாக வெளியேறியது.

வண்டியூர் கண்மாயில் இருந்து வைகை ஆறு செல்லும் கண்மாயை பொதுப்பணித்துறை தூர்வாராததால் உபரி நீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் அதன் கரைகள் உடைந்து ஜூபிலி டவுன், ஆவின் நகர், சிவசக்தி நகர் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்