ஆயுதபூஜை முன்னிட்டு கோவையில் ஒரு கிலோ செவ்வந்திப் பூ ரூ.600

By செய்திப்பிரிவு

ஆயுத பூஜையையொட்டி கோவை மார்க்கெட்டில் பூ, பொரி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றன.

கோவை மார்க்கெட்டில் பொரி ஒரு படி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதிமல்லி ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை விழாவின்போது செவ்வந்தி பூக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.

இந்த ஆண்டு வரலாறு காணாத விலையாக ஒரு கிலோ செவ்வந்தி பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா ஒரு கிலோ ரூ.320-லிருந்து ரூ.400-ஆக உயர்ந்துள்ளது. பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுதபூஜை தினத்தன்று வீடு, அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதனால் கோவை மார்க்கெட்டில் அலங்காரப் பொருட்கள் விற்னையும் அதிகரித்துள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்