முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ்) இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி 7.11.2020-ல் அரசாணை பிறப்பித்தது. மேலும், அந்த அரசாணையில் மீதமுள்ள 50 சதவீத இடங்களை மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவர்கள், அரசு பணியில் இல்லாத மருத்துவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் ஏ.பாக்கியராஜ், பி.ஆர்.புதியசாமி, எம்.ஆனந்த், பி.சி.ஸ்ரீநந்தினி, ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த அரசாணையால் அரசு மருத்துவர்களாக இல்லாத மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும். எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''இந்த அரசாணைக்கு எதிராக ஏற்கெனவே அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் மனுதாரர்கள் இப்போது தெரிவித்துள்ள கோரிக்கையை தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசு பணியிலுள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. இதனால் அரசாணையை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 mins ago

தமிழகம்

18 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்