மதுரையில் ரூ.5.3 கோடியில் வேளாண் மகத்துவ மையம்: உலகளாவிய உயர்தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் தென் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விஞ்ஞானிகள் உலகளாவிய புதிய வேளாண் ஆராய்ச்சிகளில் ஈடுபட ரூ.5.3 கோடியில் வேளாண் மகத்துவ மையம் (Centre of Innovation) அமைக்கப்படுகிறது.

காய்கறிகள், தானியங்கள், பூக்கள், பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரகங்கள் கண்டுபிடிக்கவும், பாரம்பரிய ரகங்களில் இருக்கும் சிறப்பு களை ஆவணப்படுத்தவும் நாடு முழுவதும் வெளிநாட்டு உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய வேளாண் மகத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரை ஒத்தக்கடை தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழக கல்லூரியில் தென் தமிழக விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் விஞ்ஞானி கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேளாண் மகத்துவ மையம் அமைக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.5.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் வரும் பிப்ரவரில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியது: இந்தியாவில் தோட்டப் பயிர்கள், தானியங்கள், பழங்கள் தமிழகத்தில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் பல தோட்டக்கலைப் பயிர்கள், மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட் டத்தில் பூக்கள், திருச்சியில் பழங் கள், மதுரை, திண்டுக்கலில் காய்கறிகள் என ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு சிறப்பு வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தியாகின்றன.

குறிப்பாக எல்லா மாவட் டங்களில் மல்லிகை உற்பத்தி யானாலும் மதுரை மல்லிகைக்கு சில சிறப்புகள் உள்ளன. மற்ற மல்லிகையைக் காட்டிலும், மதுரை மல்லி மணம், தரம் கொண்டவை. அதன் தண்டு, இதழ்கள் மாலை கோர்க்க இயற்கையாகவே வசதியாக உள்ளன. இதுபோல் தென் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரில் விளையும் தரமான பல ரக பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை கண்ட றிந்து அவற்றின் சாகுபடியை ஊக்கவிக்கவும், பயிரிடவும், இப்பயிர் சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை கண்ட றியவும் வேளாண்மை கல்லூரி யில் அமையும் மகத்துவ மையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய ரகங்களைக் கண்டுபிடித்து விவ சாயிகள் பயிரிட உதவுவது, பாரம்பரிய ரகத்தில் காணப்படும் சிறப்புகளைக் கண்டுபிடித்து ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பு க்கு உதவுவது, வெளிநாட்டு ரகத் தில் இருக்கும் சிறப்புகளை, நமது நாட்டு ரகத்தில் புகுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, நோய், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படும். வேளாண் கல்லூரியில் 90 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு இந்த மகத்துவ மையம் பெரும் உதவியாக இருக்கும். இதற் காக இந்த மகத்துவ மையத் துக்கு திட்ட இயக்குநர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இந்த மையத்துக்கான ஆராய்ச்சி உபகரணங்கள் ஜெர்மனி, ஜப் பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் கப்பலில் வரவழைக்கப்படுகின்றன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்