யோகாவை தொடர்ந்து ஆயுர்வேதத்துக்கும் மவுசு

By என்.சுவாமிநாதன்

இன்று தேசிய ஆயுர்வேத தினம்

பிரதமர் மோடியின் முயற்சியால் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு, உலகம் முழுவ தும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்திய பாரம்பரிய மருத்துவக் கலைகளில் ஒன்றான ஆயுர்வேதத்துக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில், இந்த ஆண்டு 28-ம் தேதி (இன்று) தன்வந்திரி பிறந்தநாளை தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

ஆயுர்வேதம் என்பது ஆயுர் வேதா என்னும் சமஸ்கிருத சொல் லின் தமிழாக்கம். இவை வேத காலங்களில் தோன்றியவை. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்ற இரு நூல்களும் அன்று இருந்த முக்கிய மருத்துவ நூல் கள். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி, மருந்துகள் மற்றும் உடல், மன நலனுக்கு அதிபதி.

ஆயுர்வேத மருத்துவத்தில் அவரது பங்களிப்பு மிக அதிகம். இதனாலேயே ஒவ்வொருஆண்டும் தன்வந்திரி பிறந்தநாள், ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்வலர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

இன்று பிறந்தநாள்

தன்வந்திரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் மத்திய அரசு தன்வந்திரி பிறந்தநாளை ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு தீபாவளிக்கும், முந்தைய நாள் தன்வந்திரி பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவமானது பொது மருத்துவம், அறுவை சிகிச்சை என இரு முக்கிய கூறுகளைக் கொண்டது. அறுவை சிகிச்சை பிரிவில் சுஸ்ருதர் முக்கியமானவர்.

6 ஆயுர்வேத கல்லூரிகள்

ஆயுர்வேத மருத்துவம் கேரளா விலும், குமரி மாவட்டத்திலும் அதிகம் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால் ஆயுர்வேதத் தின் பெருமை முழு வீச்சில் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி கூறிய தாவது:

தமிழகத்தில் மொத்தம் 6 ஆயுர் வேத மருத்துவக் கல்லூரிகள் உள் ளன. நாகர்கோவில் நீங்கலாக, மற்றவை தனியார் கல்லூரிகள். குமரி மாவட்டத்தில் காலம், கால மாக ஆயுர்வேத கலை துடிப்புடன் உள்ளது. தெரிசனங்கோப்பு, சுசீந்தி ரம் பகுதிகள் பிரசித்தி பெற்றவை.

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. இப் போது இங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள் ளது. ஏற்கெனவே வந்தவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று குண மடைந்துள்ளனர்.

பிற மருத்துவ முறைகள் நோய்க்குதான் தீர்வு சொல்கின்றன. ஆனால், ஆயுர்வேதம் நோய் வரா மல் தடுக்கவும், வந்ததை விரட்ட வும் செய்கிறது. பக்கவிளைவுகளும் கிடையாது. மத்திய அரசு இதை வளர்க்கும் விதத்தில் ஆயுர்வேத தினத்தை அறிவித்துள்ளது. அதில் நடப்பு ஆண்டுக்கு ‘சர்க்கரை நோயை தடுத்தலும், கட்டுப்படுத்து தலும்’ என்ற கருப்பொருள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்