70-வது பிறந்தநாள் | விஜயகாந்தை நேரில் சந்தித்து தொண்டர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் இன்று அக்கட்சியின் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக, விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

முன்னதாக காரில் வந்த விஜயகாந்தைப் பார்த்த தேமுதிகவினரும், ரசிகர்களும் கோஷங்களை எழுப்பினர். அப்போது விஜயகாந்த் அவர்களை நோக்கி கைக்கூப்பி, நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிறந்தநாளையொட்டி விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்கள், அவருடன் புகைப்படம் எடுத்தும் சென்றனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, கட்சி அலுவலகத்தில் 1500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகர் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்