மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு இணைந்து எழுதிய நூல் வெளியீட்டு விழா: சென்னையில் 27-ம் தேதி நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு ஆகியோர் இணைந்து எழுதிய நூல் வெளியீட்டு விழா, வரும் 27-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு இருவரும் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற அறிவியல் தமிழ் நூலை எழுதியுள்ளனர்.

இந்நூலின் வெளியீட்டு விழா, வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடக்கும் விழாவில், விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், காவல் துறை டிஐஜிசாமுண்டேஸ்வரி, பள்ளியின் தாளாளர் ஜான்சன் பாஷ்யம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நூலாசிரியர்கள் மயில்சாமிஅண்ணாதுரை, வி.டில்லிபாபு ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.

இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான்’, ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள் திட்டங்களால் அறியப்பட்டவர்.

இவர், பல அறிவியல் நூல்களை தமிழில் எழுதியுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, போர் விமான இன்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இணைந்து ஏற்கெனவே ‘விண்ணும் மண்ணும்’ என்ற அறிவியல் தமிழ் நூலை எழுதியுள்ளனர். இவர்களின் இரண்டாவது நூலான, ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ தற்போது வெளியிடப்படுகிறது.

இந்த நூலில் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இவற்றால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளநன்மைகள், இளம் தலைமுறையினருக்கு உருவாகியுள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

ஓடிடி களம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்