தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சேவை: சென்னை முதல் குமரி வரை பயணிக்கும் மாற்றுத்திறன் அதிகாரி

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளிகளில் பல வகைகள் உண்டு. அதிலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் படும் சிரமம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. காரணம் இயற்கை உபாதை கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. முதுகு தண்டு வட பாதிப்பு பெரும்பாலும் விபத்தால்தான் ஏற்படுகிறது. சிலருக்கு ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் ஏற்படுகிறது. இவர் கள் எப்போதும் மற்றவரை சார்ந்தே இயங்க வேண்டிய நிலைமை உள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட வர்களைத் தேர்வு செய்து, அவர் களுக்குள் ஒரு குழு உருவாக்கி, அவர்கள் சமூகத்தில் மதிப்பு பெற கவுன்சலிங் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார் ஞானபாரதி(42). இவரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் முதன்மை அறிவியலாளராக உள்ளேன். எனக்கு 32 வயது இருக்கும்போது, சென்னை குரோம்பேட்டையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றேன். கண் இமைக்கும் நொடியில் ரயில் மோதி விபத்துக்கு உள்ளானேன். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, வீல் சேரே வாழ்க்கையானது.

பிறகு, ‘முதுகு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு’ என்னும் அமைப்பை நிறுவினோம்.மாவட்டம்தோறும் இந்த அமைப்பை ஏற்படுத்தி, தொடர் கவுன்சலிங் கொடுத்தோம். இப்பாதிப்புக்கு உள்ளானோர் சிறுநீர் கழிப்பதற்கு, சிறுநீர் தாரை வழியே ‘கத்தீட்டல்’ குழாயைச் செருகி, அதன் மூலமே சிறுநீர் கழிக்க முடியும். அதை எளிதாக செய்வதற்கு சுய பயிற்சி கொடுத்திருக்கிறோம். மலம் கழிப்பதற்கும் இதேபோல்தான்.தண்டுவடம் பாதிப்புக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித் தொகையை ரூ.4,000 ஆக உயர்த்த வேண்டும் என அரசிடம் கோரியுள் ளோம்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்ட பலரும் நன்கு படித்தவர்கள். அவர்களுக்கு வீட்டில் இருந்தே செய்யும்படி வேலைவாய்ப்பு உருவாக்கக் கேட்டு, மென்பொருள் நிறுவனங்களிடம் பேசி வருகிறோம். உடல் உழைத்து வேலை செய்ய முடியாததால் குறைவாகவே மூச்சு விடுவோம். இதனால் அனைவருக்கும் மூச்சு பயிற்சியும் கொடுக்கிறோம் என்றார்.

முதல்வர் அறிவிப்பு

‘முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும்’ என, தமிழக முதல்வர் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அந்த நாற்காலியில் மேற்கொள்ள வேண்டிய அமைப்பு குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் எங்கள் அமைப்பிடம் கருத்து கேட்டனர். ஆனால், வழக்கமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சக்கர நாற்காலியை கொடுக்க டெண்டர் விட்டனர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் செய்தேன். அது இப்போது விசாரணையில் உள்ளது. முதல்வர் அறிவித்த திட்டத்தை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தினால் முடங்கிப் போன பலரும், வெளியில் வர உதவியாக இருக்கும்” என்றார் ஞானபாரதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

11 mins ago

இந்தியா

19 mins ago

சுற்றுச்சூழல்

29 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

24 mins ago

விளையாட்டு

45 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்