அடுத்தடுத்து தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: அடுத்தடுத்த வாரங்களில் தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், கோடை சீசன்போல தோட்டக் கலைத் துறைக்கு ரூ.10.50 லட்சம் வருவாய் கிடைத்தது.

ஆகஸ்ட் 3-வது வாரம் சனி, ஞாயிறு வார விடுமுறையைத் தொடர்ந்து திங்கள்கிழமை சுதந்திர தினவிழா விடுமுறையும் சேர்ந்ததால் 3 நாட்கள் விடுமுறையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.

இதனால், அந்த 3 நாட்களில் மட்டும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை மூலம் ரூ.7 லட்சம் வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். ஏரியில் படகு சவாரி, குணா குகை, மோயர் பாய்ன்ட், தூண் பாறை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதனால் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் மூலம் கூடுதலாக ரூ.3.50 லட்சம் கிடைத்தது. ஆக மொத்தம் ரூ.10.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

வழக்கமாக கோடை சீசனில் மட்டும்தான் இதுபோல பெரும் தொகை வசூலாகும் என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்