செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நவீன எண்டோஸ்கோப் கருவி: ரூ.21 லட்சத்தில் நிறுவப்பட்டது

By செய்திப்பிரிவு

குடல்புண், புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான நவீன வீடியோ எண்டோஸ்கோப் கருவி செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நோய் பாதிப் புக்குள்ளானவர்கள் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு சென்று வந்த நிலையில் தற்போது செங்கல்பட்டிலேயே சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் ரூ. 21 லட்சம் மதிப் பிலான நவீன வீடியோ எண்டோஸ் கோப் கருவி முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு இந்தக் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. இந்தக் கருவி மூலம் நோயாளிகளின் நோய் பாதிப்பு வீடியோ மூலம் திரையில் தெரியும். அதற்கு ஏற்றபடி சிகிச்சை அளிக்கப்படும். இதன்படி இரைப்பை, குடலில் ஏற்படும் புண்களை துல்லியமாக கண் டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும், இரைப்பைப் புற்று நோய் கட்டி இருந்தாலும் இந்தக் கருவி மூலம் கண்டறிய முடியும். இந்த வீடியோ எண்டோஸ்கோப் மைய திறப்பு விழா மருத்துவ மனை வளாகத்தில் நேற்று நடந்தது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குணசேகரன் முதல் சிகிச்சையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மருத்து வர்கள் கூறும்போது, ‘செங்கல் பட்டு மருத்துவமனைக்கு வயிறு மற்றும் குடல் புண்களால் பாதித்த நோயாளி கள் சிகிச்சை பெற வரலாம். இதற்கு முன் இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாம்’ என தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்