முதல்வர் பற்றி வதந்தி பரப்பியதாக மேலும் 2 பேர் கைது; 50 பேர் மீது வழக்கு- கைது நடவடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தவ றான தகவல்களைப் பரப்பியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்ட னர். 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நட வடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ ருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் அவரது உடல்நிலையில் தொடர்ந்து காணப் படும் முன்னேற்றம் குறித்து மருத் துவமனை நிர்வாகம் அவ்வப்போது செய்திக்குறிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனாலும், முதல்வரின் உடல்நிலை பற்றி சமூக வலை தளங்களில் தொடர்ந்து வதந்தி கள் பரப்பப்படுகின்றன. இதை தடுக்கக் கோரி அதிமுக நிர்வாகி கள் பலர் சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் கொடுத் தனர். ஆன்லைன் மூலமாகவும் பலர் புகார் கொடுத்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை பரப்பிய தாக நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு அடுத்த தேவனாங்குறிச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் சர்மா, மதுரை மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த மாடசாமி ஆகிய 2 பேரை போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதாவின் உடல்நிலை குறித்து முகநூலில் வதந்தி பரப்பிய திரு மணிச்செல்வம் (28), பால சுந்தரம் (42) ஆகிய 2 பேரை மத் திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ள னர். திருமணிச்செல்வம் தூத்துக் குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வேப்பலோடையை சேர்ந்தவர். வங்கி ஊழியரான இவர், ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்தி செய்திகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். பாலசுந்தரம், சென்னை பம்மல் எல்ஐசி காலனியில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரும் ஃபேஸ்புக் மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியுள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வதந்தி பரப்பியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. கைது நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்