உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தலைமையில் நேற்று தேர்தல் பார்வையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையர் சீத்தாராமன் பேசியதாவது:

தேர்தல் பார்வையாளர்கள் கள ஆய்வின்போது வாக்காளர் பட்டியல்கள் தேவையான எண்ணிக் கையில் உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். அதிகமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும். பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.

வாக்குப்பதிவு மற்றும் அது தொடர்பான பொதுமக்களின் குறை களையும், புகார்களையும் தொடர் புடைய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தீர்த்து வைக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அலு வலர் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவைப்படும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை உறுதியாகப் பின்பற்றுதல், விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் புகார் செய்தல் வேண்டும்.

தேர்தல் முடிவுற்றது தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும். வாக்கு எண்ணிக்கையை பார்வை யிட்டு, முடிவு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட அறிவிக்கைகள் மற்றும் சிறப்பு அறிக்கைகளை அனுப்புதல் வேண்டும். மேலும், தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆணையர் சீத்தா ராமன் கூறினார்.

இக்கூட்டத்தில், மாநில தேர் தல் ஆணையர் த.சு.ராஜசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்