கார் வாங்கும் ஆசையில் சொந்த வீட்டிலேயே திருடிய கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை ராமாபுரம் காமராஜர் சாலையில் வசிப்பவர் நாராயணன் லால் (45). வீட்டின் தரை தளத்தில் எலெக்ட்ரிகல்ஸ் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மகேந்திரன் (19) உட்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகேந்திரன் தனியார் கல்லூரியில் பிசிஏ 2-ம் ஆண்டு படிக்கிறார்.

நாராயணன் லால் தனது மனைவி, மகளுடன் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு, கடையை மகேந்திரன் கவனித்து வந்தனர்.

கடந்த 1-ம் தேதி இரவு 9 மணி அளவில் கடை, வீட்டை பூட்டிவிட்டு மகேந்திரன், அவரது தம்பி மற்றும் கடை ஊழியர்கள் 4 பேரும் கொளப்பாக்கத்தில் உள்ள நாராயணன் லாலின் தம்பி மோகன் லால் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பினர். அப்போது, பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ராயலா நகர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகேந்திர னின் நண்பர்கள்தான் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணை யில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: புதிதாக கார் வாங்கித் தருமாறு மகேந்திரன் கடந்த சில மாதங்களாகவே தனது தந்தை நாராயணன் லாலிடம் கேட்டு வந்துள்ளார். அவர் மறுத்துவிட்டார். இதனால், கார் வாங்குவதற்காக தன் வீட்டிலேயே திருட தனது கல்லூரி நண்பர்கள் ஜீவா, ராஜேஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து மகேந்திரன் திட்டம் போட்டார்.

கடந்த 1-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது நகை, பணத்தை திருடுமாறு நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன்படி ஜீவா, ராஜேஷ்குமார் திருடியுள்ளனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். திருட்டு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட மகேந்திரனும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 34 பவுன் நகைகள், ரூ.7.5 லட்சம் மீட்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

கருத்துப் பேழை

3 mins ago

சுற்றுலா

40 mins ago

சினிமா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்