அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: வேட்பாளர்களிடம் கருத்து கேட்பதை நிறுத்தி வைக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வேட்பாளர்கள் மனு

By செய்திப்பிரிவு

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி களில் தேர்தலை தள்ளிவைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தொகுதிகளின் வேட்பாளர்களிட மும் கருத்து கேட்கும்படி ஆணை யத்துக்கு உத்தரவிட்டது. இதை யடுத்து, வேட்பாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி கருத்து கேட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகம் வந்த, அதிமுக வேட் பாளர்கள் வி.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எம்.ரங்கசாமி (தஞ்சை) ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி களில் தேர்தல்கள் முதலில் மே 23-ம் தேதிக்கும், அதன் பின் ஜூன் 13-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கைகளை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு அதி காரம் இல்லை.

தமிழக ஆளுநரின் அறி விக்கை படி, மே 21-ம் தேதிக் குள் தமிழகத்தில் தேர்தல் தொடர் பான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். எனவே, மே 22-ம் தேதி இது தொடர்பாக, தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மே 15 மற்றும் 20-ம் தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் சட்டப்படியான தல்ல என்றும், மே 31-ம் தேதிக் குள் தமிழகத்தில் தேர்தல் நடவடிக் கைகளை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தோம்.

எனவே, 2 தொகுதிகளில் தேர் தல் தொடர்பான ஆளுநரின் முடிவு வெளியாகும் வரையில், வேட்பாளர்களிடம் கருத்து கேட்பதை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடப்பதாலும், ரம்ஜான் பண்டிகையை கருதியும், அரவக் குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களை அறிவித்த தேதியில் இருந்து முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகலை யும் ராஜேஷ் லக்கானியிடம் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்