பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டத்துக்கு 2-வது இடம்: 10-ம் வகுப்பில் 3-வது இடம் பெற்றது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் 4-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்துக்கு விருதுநகர் மாவட்டம் முன்னேறியது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 10,438 மாணவர்கள், 11,770 மாணவிகள் என மொத்தம் 22,208 பேர் பங்கேற்றனர். இவர்களில் 9,987 மாணவர்கள், 11,615 மாணவிகள் என மொத்தம் 21,602 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 906 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.68. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.68. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.27.

மாநிலத்தில் 2-வது இடம்

ராமநாதபுரம் மாவட்டத்திலி ருந்து விருதுநகர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது முதல் 2013-ம் ஆண்டு வரை பிளஸ் 2 பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தது. அதன் பின் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பெற்றது. 2019-ல் மாநில அளவில் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 2020-ல் 4-ம் இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு 2-ம் இடம்பெற்றுள்ளது கல்வியாளர்களிடையே வர வேற்பை பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள்

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 93 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3,282 மாணவர்கள், 3,722 மாணவிகள் என மொத்தம் 7,004 பேர் பங்கேற்றனர். இதில், மாணவர்களில் 3,023 பேர், மாணவிகளில் 3,604 பேர் என மொத்தம் 6,627 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம்பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு

மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 12,678 மாணவர்கள், 12,768 மாணவிகள் என மொத்தம் 25,446 பேர் பங்கேற்றனர். இதில், 11,905 மாணவர்கள், 12,514 மாணவிகள் என மொத்தம் 24,419 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,027 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் 95.96. ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 3-வது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.

181 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 4,523 பேர், மாணவிகள் 4,641 பேர் என மொத்தம் 9,164 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 4,089 மாணவர்கள், 4,480 மாணவிகள் என மொத்தம் 8,569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்