கரூர், புதுக்கோட்டையில் வருமான வரித்துறை அதிரடி: திமுக எம்எல்ஏ வீடு, விடுதியில் சோதனை

By செய்திப்பிரிவு

அன்புநாதன் பள்ளி நிர்வாகி வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும் தற்போதைய திமுக வேட்பாளருமான கே.சி.பழனிசாமியின் வீடு, விடுதியில் வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இதேபோல, அதிமுக பிரமுகர் கரூர் அய்யம்பாளையம் சி.பி.அன்புநாதன் நடத்தி வரும் பள்ளி யின் முதன்மை செயல் அலுவலர் சுதர்சன் வீடு, அய்யம்பாளையத்தில் உள்ளது. அங்கு, வருமான வரித் துறை துணை இயக்குநர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள், நேற்று காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, அதிமுக பிரமுகர் ராயனூர் சுப்பிரமணியன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான மெஸ்ஸில், வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். இதில், பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

விராலிமலையில்…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் பழனியாண்டி. அதிமுக பிரமுகரான இவர், வேளாண் துறையின் ஆத்மா கமிட்டித் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரான சி.விஜயபாஸ் கருக்கு நெருக்கமானவராகக் கரு தப்படும் பழனியாண்டி வீட்டில், வாக்காளர்களுக்கு விநி யோகம் செய்வதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட் கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாக, புதுக் கோட்டையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத் துள்ளது.

இதையடுத்து, வருமான வரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், பழனியாண்டி வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்ட னர். அப்போது, ரூ.3.87 லட்சம் ரொக்கம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா படங்களுடன் கூடிய 81 வெண்கல காமாட்சி விளக்குகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பழனியாண்டி மீது விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்