தேர்தல் எதிரொலி: இரண்டு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.310 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மே 12, 13 ஆகிய இரண்டு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.310 கோடி அளவுக்கு மது விற்பனை செய்யபட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மே 14, 15, 16 ஆகிய 3 தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, கடந்த 2 தினங்களைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளன. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் வாக்குசேகரிப்பு பணிகள் ஆரம்பித்தது முதல் டாஸ்மாக் கடைகளின் வருமானம் ஒரு நாளைக்கு சுமார் 20 சதவீதம் உயர்ந்தது.

தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளிலிருந்து நாளொன்று சுமார் ரூ.65 கோடி வரை வருமானம் வருகிறது. இந்த தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.85 கோடி வரை வருமானம் வந்தது.

கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக கடந்த வியாழன், மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முறையே ரூ.130 கோடி மற்றும் ரூ.180 கோடி என 2 நாட்களில் ரூ.310 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்