இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவு

By செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரியில் 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

அரசு தேர்வுத் துறை இயக்கு நர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள், ரேங்க் பட்டி யலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிடு கிறார். தேர்வு முடிவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டதும், தேர்வுத் துறையின் இணையதளங் களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

வெளியாகும் இணையதளங்கள்

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்றும் நாளையும் (மே 17, 18) விண்ணப் பிக்கலாம். பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 19-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறை இணை யதளத்தில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு, தங்கள் பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டால் போதும்.

மேலும், தற்காலிக மதிப் பெண் சான்றிதழை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலும் 21-ம் தேதி முதல் நேரில் பெற்றுக்கொள்ள லாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

கருத்துப் பேழை

10 mins ago

சுற்றுலா

47 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்