முன்னாள் அமைச்சர் வீட்டின் அருகே துணை ராணுவப்படை திடீர் சோதனை

By செய்திப்பிரிவு

விருதுநகரில் முன்னாள் அமைச் சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு துணை ராணுவப் படையினர் திடீர் வாகனச் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்கா ணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதோடு, பொதுமக்கள் அச்ச மின்றி 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் வகையிலும், தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விருதுநகரில் உள்ள 7 தொகுதி களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற் கொள்ள 10 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 1,100 துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலரும், அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டின் அருகே ரயில்வே பீடர் சாலை சந்திப்பில் பஜார் காவல்நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் துப்பாக்கிய ஏந்திய துணை ராணுவப்படையினர் ஜீப்பில் வந்திறங்கினர்.

அந்த வழியாகச் சென்ற கார்கள், வேன்கள், ஜீப்புகள், லாரிகள் மட்டுமின்றி பைக்கில் சென்றவர்களையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களின் எண்களையும் போலீஸார் குறித் துக் கொண்டனர். நீண்டநேர சோதனைக்குப் பின் அங்கிருந்து போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் புறப்பட்டுச் சென் றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

39 mins ago

வணிகம்

54 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்