சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம்

By செய்திப்பிரிவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 8-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக செங்கல்கட்டுமானம் கண்டறியப்பட்டுஉள்ளது.

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப். 13-ம் தேதி தொடங்கியது. அதன் அருகே உள்ள அகரம், கொந்தகையில் மார்ச் 30-ம் தேதி அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

கீழடியில் 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணி நடந்து வருகின்றன. இதுவரை நீளவடிவத் தாயக்கட்டை, பாசிமணிகள், வளையல்கள், சேதமடைந்த பானைகள், மனித தலை சுடுமண் சிற்பம்உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டதொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகையில் 2 குழிகள் தோண்டப்பட்டு 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் தற்போது கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இப்பகுதியில் நடந்த 7 கட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டன. அதேபோல் 8-ம் கட்ட அகழாய்விலும் தற்போது முதன்முறையாக செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்