பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதா? - காவல்துறைக்கு கருணாநிதி கண்டனம்

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண் கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அராஜகங்களை காவல் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் மதுக்கடைகளை மூடக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற் றன. மதுக்கடையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர்.

இப்படி மதுவிலக்கு கொள்கைக் காக தமிழகமே ஒருமித்த குரல் கொடுத்தபோதும் மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பையும் முதல் வர் ஜெயலலிதா வெளியிடவில்லை.

இந்நிலையில், சென்னை மதுர வாயலில் டாஸ்மாக் மதுக்கடை களை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள், குழந்தைகள் மீது போலீஸார் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த யாரும் இதை கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள்.

போலீஸாரின் தாக்குதலில் 10 பெண்களின் மண்டை உடைந்துள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இனியாவது இதுபோன்ற அராஜகங்களை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்