பண விநியோகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் துணை போகின்றனர்: அன்புமணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பண விநியோகத்துக்கு தேர்தல் அதிகாரிகளும் துணை போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையில் திமுக வும் அதிமுகவும் ஈடுபட்டு வரு கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதோடு, பல இடங்களில் பண விநியோகத்திற்கு துணை யாக இருக்கின்றனர். இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

குறைந்தபட்சமாக திமுக ரூ.500, அதிமுக ரூ.1000 என பணம் விநியோகிக்கின்றன. முக்கிய தலைவர்கள் போட்டி யிடும் தொகுதிகளில் இன்னும் பல மடங்கு அதிகமாக பணம் வழங்கப்படுகிறது. ஜோலார் பேட்டை தொகுதியில் ரூ.2 ஆயி ரம், எடப்பாடியில் ரூ.3 ஆயிரம் வீதம் அதிமுகவினர் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூரிலும், கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி தொகுதியிலும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் விநியோகித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் பண விநியோகம் முடிவடைந்து விட்டது. ஆனால், பண விநி யோகத்தில் ஈடுபடும் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலை யில், இனியாவது பண விநி யோகத்தை தடுக்க வேண்டும். பண விநியோகத்தை தடுக்காமல் இருக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

33 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

31 mins ago

சினிமா

49 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

43 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

57 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்