புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

By செய்திப்பிரிவு

கடலூர்/விழுப்புரம்/புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் கடலூர் துறைமுகப்பகு தியில் படகுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குகடற்கரை பகுதியில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இன பெருக்க காலமான ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல் படுத்தப்படுகிறது.

இதன்படி நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ள உள்ள விசை படகுகள் மற்றும் பைபர்படகு மீனவர்கள் மீன் பிடிக்ககடலுக்கு செல்லவில்லை. கடலூர்துறைமுகம், முடசலோடை, அண்ணங்கோவில், சாமியார்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறுஇடங்களில் படகுகளை பாதுகாப் பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த தடைக்காலத்தை பயன்படுத்திக் கொண்டு விசைபடகு மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைப்பது, படகுகளில் ஏற்பட்டுள்ள பழுது களை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

கட்டுமரத்தில் செல்லும் மீனவர் கள் 12 நாட்டிக்கல் மைல் வரை சென்று மீன் பிடித்து விட்டு திரும்பி வந்துவிடுகின்றனர். கட்டுமரத்தில் மட்டுமே சென்று மீன்பிடிப்பதால் குறைந்த அளவிலான குறிப்பிட்ட சிலவகை மீன்கள் மட்டுமே கிடைக்கின்றன. இதனால் மீன்விலை உயரும் என்று கூறப்படு கிறது. இந்த தடைக்காலத்தில் மீன்பிடி தடை கால நிவாரணத்தை உடனே வழங்கிட வேண்டும். இதை பயன்படுத்தி அரசு மீன்பிடி துறைமுகங்களை ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனர் மீனவர்கள்.

விழுப்புரம்

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரியிலும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் தலைமைச் செயலக சார்பு செயலர் (மீன்வளம்) கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய மீன்வள அமைச்சக துணை செயலரின் கடித்தத்தின்படி, கடல்சார் வளங்களை நீண்ட காலத்துக்கு நிலைநிறுத்தும் வகையில் பாதுகாத்திட, 2022-ம்ஆண்டில் ஏப்ரல் 15-ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம், புதுக் குப்பம் மீனவ கிராமங்கள் வரை யிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும், ஏனாம் மீன் பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் பாரம்பரிய மீன்பிடி படகுக ளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக, இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

இதே போல் மாஹே பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 61 நாட்களும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர இழு வலைகளை பயன்படுத்தும் அனைத்து வகை படகுகள் கொண்டு மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 2,348படகுகளில் மீன்பிடிக்க செல்லும்சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் படகுகள் தேங்காய்திட்டு துறைமுகம் மற் றும் காரைக்கால் துறைமுகம், கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் வலைகள் மற் றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், புதுச்சேரியில் மீன்க ளின் விலையும் உயரத் தொடங் கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்