மதுரை மாநகராட்சிக்கு ரூ.408 கோடி சொத்து வரி பாக்கி: 77% மட்டுமே வசூல்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.408 கோடி சொத்துவரி பாக்கி உள்ளது. ஆணையாளர் மேற்கொண்ட நடவடிக்கையால் 77 சதவீதம் சொத்துவரி மட்டுமே வசூலாகி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டுக்கான சொத்து வரி கட்டாத வீடு, கடைகளின் உரிமை யாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வரி வசூல் செய்யப்படுகிறது.

அதனால், கடந்த ஒரு ஆண்டில் 77 சதவீதம் சொத்து வரி வசூலாகி உள்ளது. அவ்வாறு இருந்தும் ஒட்டு மொத்தமாக ரூ.408 கோடி வரிபாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு காரணமாக மாநகராட்சியில் பொதுமக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூல் செய்ய வில்லை. அதனால் வரி நிலுவை அதிகரித்துள்ளது.

வீடுகள், வணிக வளாகங்களின் சொத்துவரி வசூலாகிறது. ஆனால், காலி மனைகளுக்கான வரி மட்டும் வசூலாவதில்லை.

நீதிமன்ற வழக்குகளை காரணம் சொல்லியும், அவர்களுக்கான வரியை நிர்ணயம் செய்வதில் உள்ள குளறுபடிகளாலும் வரி வசூலாகவில்லை. அதற்கும் தீர்வு காணப்பட்டு வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர், பாதாளச் சாக்கடை வரியும் வசூலாவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்