தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: பழனிசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்த மடிக்கணினி, ஆடு, மாடு வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். அதற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்றகுற்றங்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கேட்டுள்ளோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் 3 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை இது காட்டுகிறது. இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் சில கருத்துகளை முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 110-வது விதியின்கீழ், பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றை முதல்வர் மறைத்துவிட்டு, ஒரு சிலஅறிவிப்புகள் நிறைவேற்றப்பட வில்லை என கூறுகிறார். பாலம், சாலை அமைப்பதில் நில ஆர்ஜிதம் தொடர்பாக பிரச்சினை இருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும், மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பிரச்சினை இருக்கும். அதிமுக ஆட்சியில்தான் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆட்சியர் மாநாடு, எம்ஜிஆர்நூற்றாண்டு விழா ஆகியவற்றில்பல்வேறு பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மானிய கோரிக்கையில் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இவற்றை முதல்வர் சுட்டிக்காட்டவில்லை. வேண்டுமென்றே அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளார். சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் முதல்வர் இதுபோன்ற செய்தியை கூறியுள்ளார். மடிக்கணினி திட்டம்பட்ஜெட்டில் இல்லை. தாலிக்குதங்கம் திட்டத்தை கைவிட்டுவிட் டார்கள். கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என மக்களுக்கு பயன்படும் திட்டங்களுக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட் டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்