100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வு பணிகள்: காஞ்சியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளராக கஞ்சன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், காஞ்சிபுரத்தில் 4 ராஜவீதிகளில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பலூன் ஆகியவற்றை நேற்று பார்வையிட்டார்.

பின்னர், அஞ்சலகங்களில் மே 16-ம் தேதி தேர்தல் நாள் என குறிப்பிடும் முத்திரையை தபால்களில் பதிவு செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். திருக்காலிமேடு பகுதியில், வாக்காளரின் வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் விவிபிஏடி என்ற இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

செவிலிமேடு பகுதியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை யும் பார்வையிட்டார்.

19,391 மாணவர்கள் சேர்ப்பு

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிலையங்கள் என 157 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் 19,391 மாணவ-மாணவிகளின் பெயர்களை சிறப்பு முகாம் நடத்தி ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளோம். மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 13,937 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினரின் வாகன சோதனைகளில் 11 லட்சத்து 82 ஆயிரத்து 125 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சம்பந்தப் பட்டவர்களிடம் அவை ஒப்படைக் கப்பட்டன. 57 தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் மீது விசாரணை நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்