திமுக கூட்டணிக்கு மேலும் 8 அமைப்புகள் ஆதரவு

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணிக்கு மேலும் 8 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமுத்துவப் படை ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்த 6 கட்சிகளுக்கும் 54 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர பல்வேறு சமூக, ஜாதி, மத, மொழி அடிப்படையிலான அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை 250-க்கும் அதிகமான அமைப்புகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முத்தரையர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம், பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில இமாம்கள் பேரவை, தமிழர் மறுமலர்ச்சி கழகம், மல்லர் பாரதம், உழவர் முன்னேற்ற கட்சி, எம்.ஆர். கழகம் ஆகிய 8 அமைப்புகளின் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளர் கோவை மணி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கே.பி. கலைச்செல்வா, எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

14 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்