மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

By செய்திப்பிரிவு

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று சென்னை அண்ணாநகரில் வெளியிட்டார்.

மதிமுகவின் 29 வேட்பாளர்கள் பட்டியல்

1. கோவில்பட்டி - வைகோ

2. திருப்போரூர் - மல்லை சத்யா

3. காரைக்குடி - புலவர் சே. செவந்தியப்பன்

4. ஆலங்குடி - டாக்டர் க. சந்திரசேகரன்

5. செஞ்சி - ஏ.கே. மணி

6. சங்கரன்கோவில் - டாக்டர் சதன் திருமலைக்குமார்

7. சிங்காநல்லூர் - ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்

8. குளச்சல் - சம்பத் சந்திரா,

9. திருச்சி கிழக்கு - டாக்டர் ரொஹையாசேக்முகமது

10. நாகர்கோவில் - ராணி செல்வின்

11. அண்ணா நகர் - மல்லிகா தயாளன்

12. தூத்துக்குடி - பேராசிரியை பாத்திமா பாபு

13. மதுரை தெற்கு - புதூர் மு. பூமிநாதன்

14. ஆர்க்காடு - பி.என். உதயகுமார்

15. பாளையங்கோட்டை - கே.எம்.ஏ. நிஜாம்

16. ஆயிரம் விளக்கு - ரெட்சன் சி. அம்பிகாபதி

17. கிணத்துக்கடவு - பொறியாளர் வே. ஈஸ்வரன்

18. ஆவடி - வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ்

19. துறைமுகம் - முராத் புகாரி

20. உசிலம்பட்டி - ஆ. பாஸ்கர சேதுபதி

21. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்

22. பூவிருந்தவல்லி (தனி) - பூவை து. கந்தன்

23. பல்லடம் - க. முத்துரத்தினம்

24. ஈரோடு மேற்கு - நா. முருகன்

25. ஜெயங்கொண்டம் - எம்.எஸ். கந்தசாமி

26. அரவக்குறிச்சி - கோ. கலையரசன்

27. முதுகுளத்தூர் - பொ. ராஜ்குமார்

28. தாராபுரம் - வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி-பம்பரம் சின்னம்)

29. பல்லாவரம் - கி. வீரலட்சுமி, (தமிழர் முன்னேற்றப் படை-பம்பரம் சின்னம்)

கோவில்பட்டியை வைகோவுக்கு விட்டுக்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்

கோவில்பட்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. இதுவரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை அக்கட்சி வென்றுள்ளது. இருப்பினும் இம்முறை கோவில்பட்டியை மதிமுகவுக்கு உறுதியாக கேட்டுப் பெற்றுள்ளார் வைகோ.

இந்தத் தொகுதியில் அவரே போட்டியிட விரும்புவதால்தான், தாங்கள் தொகுதியை விட்டு கொடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நலக்கூட்டணியின் 5-ம் கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை கோவில்பட்டியில் நடத்தியது, விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் கோவில்பட்டியில் வைகோ கலந்து கொண்டது போன்றவை, இத்தொகுதியை வைகோ குறிவைத்ததையே காட்டுகிறது என்கின்றனர்.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் தொகுதிகள் விவரம்

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி இணைந்து 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொகுதிப் பங்கீடு

தேமுதிக -104

மதிமுக - 29

தமாகா - 26

விடுதலை சிறுத்தை - 25

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25

இந்திய கம்யூனிஸ்ட் - 25

தேமுதிக 104 தொகுதி வேட்பாளர்களில், இதுவரை 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமாகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்