தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: அழகிரி

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இது தனது ஆதரவாளர் களுக்கும் பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களிடம் பேசும் போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்த லில் யாருக்கும் நான் ஆதரவு அளிக்கப் போவதில்லை. எனது ஆதரவாளர்களும் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்கள்’’ என்றார்.

திமுகவுக்கும் அழகிரிக்கும் தொடர்பில்லை என்று மு.க.ஸ்டா லின் கூறியிருப்பது பற்றி கேட்டபோது, ‘‘யார் சொன்னது’’ என கோபமாக கேட்டார் அழகிரி.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த அழகிரிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக் கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2014 ஜனவரி 24-ம் தேதி திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார்.

கடந்த மாதம் 24-ம் தேதியும் கடந்த 14-ம் தேதியும் கருணா நிதியை அவரது இல்லத்தில் அழ கிரி சந்தித்துப் பேசினார். இதனால், அவர் மீண்டும் திமுக வில் இணைவார் என்று அக்கட்சி யினர் மத்தியில் பேச்சு எழுந்தது. இந்தச் சூழலில் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அழகிரி கூறியிருப்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்