சென்னையில் தேமுதிக செயற்குழு 10-ம் தேதி கூடுகிறது

By செய்திப்பிரிவு

தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கட்சி யிலிருந்து விலகியுள்ள சூழலில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேமுதிக - மக்கள் நலக் கூட்ட ணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தால் சந்திரகுமார் உட்பட 10 நிர்வாகிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த சூழலில், தேமுதிகவின் செயற்குழு கூட்டம் சென்னை கோயம் பேட்டில் வரும் 10-ம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தேமுதிகவின் 57 மாவட்ட அமைப்புகளில், மாவட்டத்துக்கு தலா 2 செயற் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர உயர் மட்டக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 200-க்கும் அதிகமான தேமுதிக நிர்வாகிகள் அன்றைய தினம் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தேமுதிகவின் செயற்குழு கூட்டத்திலேயே, தேமுதிக போட்டி யிடவுள்ள தொகுதிகளின் விவரம் குறித்து விஜயகாந்த் தெரிவிப்பார் என்றும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுரைகளை வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூத்த நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், ம.ந.கூட்டணியால் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் விதமாக விஜயகாந்த் பேசுவார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்