தேமுதிக தலைவர் விஜயகாந்த் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல்

By செய்திப்பிரிவு

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிட்டுள்ள நிலையில் வேட்புனு தாக்கல் செய்ய தேமுதிக வேட்பாளர்களுக்கு சேலத்தில் நடந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சில இடங்களில் சுயேச்சைகள் தவிர, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘வேட்பாளர்கள் விரும்பியபடி, 22-ம் தேதி (நேற்று) முதல் வரும் 29-ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்துகொள்ளலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இருப்பினும், தேமுதிக வேட்பாளர்கள் வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், விஜயகாந்த் வரும் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்