திமுகவில் இணைந்த 10 சுயேச்சைகள்: அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை தன்வசமாக்கியது திமுக

By பெ.பாரதி

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் 10 பேர் திமுகவில் இணைந்ததால், அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை திமுக தன் வசமாக்கியுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு திமுக, அதிமுக இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் அரியலூரில் 3 சுயேச்சைகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நேற்று (பிப் 22) இரவு திமுகவில் இணைந்தனர்.

இதனால் அரியலூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது. இவர்கள் 3 பேரும் திமுகவில் சீட் தராததால் சுயேச்சையாக நின்று வெற்றிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் விசிகவும் வெற்றி பெற்ற நிலையில், சுயேச்சை ஒருவர் திமுக வில் நேற்று இணைந்ததால் ஜெயங்கொண்டம் நகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.

உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் திமுகவும்,விசிக, காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 சுயேச்சைகள் நேற்று திமுவில் இணைந்தனர்.

அதேபோல் வரதராஜன்பேட்டையில் உள்ள 15 வார்டுகளில் 7 திமுக, 8 சுயேச்சை வெற்றி பெற்ற நிலையில் 3 சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 2 பேரூராட்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்