3 கட்சிகளின் தலைவர்கள் போட்டி: விஐபி மாவட்டமான தூத்துக்குடி

By செய்திப்பிரிவு

முக்கிய மூன்று கட்சிகளின் தலைவர் கள் போட்டியிடுவதால் விஐபி மாவட் டமாக மாறியுள்ளது தூத்துக்குடி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் களம் காண்கிறார். இதற்கு முன் மக்க ளவை, மாநிலங்களவை உறுப்பினராக அவர் பணியாற்றிய போதிலும், முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பின ராக வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் சமக தலைவர் ஆர்.சரத்குமார் திருச்செந் தூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதி மட்டுமே சமகவுக்கு தரப்பட்டுள்ள நிலையில், இங்கு எப்படியும் வென் றாக வேண்டிய கட்டாயத்தில் தனது மனைவி ராதிகாவுடன் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளார் சரத்குமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதியான ஓட்டப்பிடாரத்தில், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியின் நடப்பு எம்எல்ஏவான இவர், இதே தொகுதியில் இதற்கு முன் 4 முறை போட்டியிட்டு, 2 முறை வெற்றி பெற்றுள்ளார்.

இம்மூன்று தலைவர்களும் வெவ் வேறு அணிகளில் போட்டியிடுவதால் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அத்துடன் தமிழக அளவில் உன்னிப்பாக கவனிக்கப் படும் மாவட்டமாகவும் மாறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்