பாஜக கூட்டணியில் தேவநாதன் கட்சிக்கு 24, ஐஜேகேவுக்கு 45 தொகுதி: புதிய நீதிக்கட்சி திடீர் விலகல்

By செய்திப்பிரிவு

பாஜக கூட்டணியில் இருந்து புதிய நீதிக்கட்சி விலகியுள்ளது. பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகளும், தேவநாதன் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, லோக் ஜன சக்தி, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேச்சு நடத்தி வந்தது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று தொகுதி பங்கீடு பேச்சு நடைபெற்றது. அப்போது இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகளும், தேவநாதன் கட்சிக்கு 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது. தொகுதி உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

5 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

20 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்