எந்த தொகுதியில் போட்டி? - தமிழிசையின் தேடுதல் படலம்

By செய்திப்பிரிவு

எந்தத் தொகுதியில் போட்டியி டுவது என்பதை அடையாளம் காண முடியாமல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவித்து வருகிறார்.

கூட்டணி முயற்சிகள் தோல்வியடைந்ததால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து, 54 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25-ம் தேதி வெளியிட்டது. சென்னை தியாகராய நகரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவை தெற்கு தொகுதி யில் மாநில துணைத் தலை வர் வானதி சீனிவாசன் போட்டி யிடுகின்றனர்.

முதல் பட்டியலில் தமிழிசை சவுந்தரராஜனின் பெயர் இடம் பெறவில்லை. இது தொடர்பாக அவரது ஆதரவாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டி யிட தமிழிசை விரும்பினார். ஆனால், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்க ளின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை கைவிட்டார்.

அடுத்ததாக தனது கணவரின் ஊரான கோவையில் சிங்காநல்லூர் அல்லது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால், ஜாதி அரசியலால் அங்கும் போட்டியிட முடியவில்லை.

எனவே, தற்போது சென்னை யில் விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட ஆலோசித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் நிலையில் டெபாசிட் பெறும் அளவுக்காவது வாக் குளைப் பெற வேண்டும் என நினைப்பதால் தனக்கான தொகு தியை அடையாளம் காண முடி யாமல் தமிழிசை தவித்து வருவதாக பாஜக நிர் வாகிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

க்ரைம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்