கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் விலகல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் மாதையன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த முறை கிருஷ்ணகிரி தொகுதியில் மதிமுக சார்பில் கட்டாயம் உங்களுக்கு சீட் வழங்கப்படும் என வைகோ என்னிடம் உறுதியளித்தார். அவரது வார்த்தையை நம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளில் தீவிரம் காட்டினேன். கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னின்று செலவுகள் செய்தேன். இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீட்டில் மதிமுக சார்பில் போட்டியிட தென் மாவட்டங்களில் மட்டுமே அதிக இடத்தை வைகோ கேட்டு பெற்றுள்ளார்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட மதிமுக போட்டியிடவில்லை. தமாகாவுக்கு கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, மாவட்டச் செயலாளர் உட்பட அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்து, இதுகுறித்து வாட்ஸ் அப் மூலம் வைகோவுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்