பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு அதிக அளவில் செல்வார்கள். இதனால், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதைச் சமாளிப்பதற்காக, 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயிலில் (வண்டிஎண்.22153) வரும் 17-ம் தேதியும், சேலம் - எழும்பூர் அதிவிரைவுரயிலில் (22154) 16-ம் தேதியும், கோவை-நாகர்கோவில் அதிவிரைவு ரயிலில் (22668) 12, 13-ம் தேதியும், நாகர்கோவில்-கோவை அதிவிரைவு ரயிலில் (22667) 13, 14-ம் தேதியில் தலா 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலில் (12084) 12, 13-ம் தேதியும், மயிலாடுதுறை - நாகர்கோவில் ஜனசதாப்தி ரயிலில் (22607) தலா 2 இருக்கை வசதி பெட்டிகளுடன் 12,13-ம் தேதியும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

30 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்