ஆரத்தி எடுத்தவருக்கு பணம்: டி.ஜெயக்குமார் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த புகாரில், ராயபுரம் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குக்கு லஞ்சம் அளிப்பது போன்றது என்பதால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதியப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.

ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ஈரோடு பெண் நிர்வாகி ஆகியோர் மீது ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக புகார் வரப்பெற்றது. அவர் கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை, ராயபுரம் வேட்பாளர் டி.ஜெயக்குமார், ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து, சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையின் பேரில், தற்போது தண்டையார்ப்பேட்டை போலீஸார், டி.ஜெயக்குமார் மீது, தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

9 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்