தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்த தடையும் இல்லை: தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பெண்களுக்கு கூடுதல் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகளை ஒதுக்காமல், ஒட்டுமொத்த வார்டுகளையும் சமமாகப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் தமிழக அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நேற்று ஆஜராகி முறையீடு செய்தார்.அதற்கு விளக்கம் அளித்த நீதிபதிகள், ‘‘தேர்தல் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றுதான் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை’’ என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் அறிவிப்பை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைமை வழக்கறிஞர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 secs ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்