ஒரு காலத்தில் புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் இன்று அதன் பெயரை இழந்து வருகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

By செய்திப்பிரிவு

சென்னை: ஒரு காலத்தில் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் இன்று அதன் பெயரை இழந்து வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக பணிபுரிந்த பாஸ்கர் என்பவருக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து வீரபாண்டி மற்றும் செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘ஒரு காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கிய சென்னைப் பல்கலைக்கழகம், இன்றைக்கு அதன் பெயரை இழந்து வருவது வேதனையளிக்கிறது. முன்பெல்லாம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதை பெருமையாக கருதும் காலம்போய், தற்போதும் அதே பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

பல்கலைக்கழகத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய நேர்மையையும், சேவையையும் பேணி பாதுகாக்க வேண்டும். அவ்வாறு இல்லாத அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பொறுப்பில்லாமல் செயல்படும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். பாஸ்கருக்கு கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது சட்டவிரோதமானது.

எனவே இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்