முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் புதுவையில் கட்டுப்பாடுகள்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனால் தற்காலிக மருத்துவமனைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு எடுத்து வருகிறது. மேலும், கரோனா தடுப்பு நடைமுறைகளை மீண்டும் கடுமையாக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். திரையரங்குகள், கடைகள் வீதிகள், பேருந்துகள், கலையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.

அதன்படி முகக்கவசம் அணியா வதர்களிடம் காவல்துறையினர் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் பேரை அனுமதிப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண் டுள்ளனர்.

அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அரசு பிற மாநிலத்தவரை அதிகளவில் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதித்துவிட்டு தற்போது மாநில மக்கள் மீது கட்டுப்பாடுகளை திணிப்பது எந்த வகையில் நியாயம்? என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. மேலும் பார்கள், மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை புறக்காவல் நிலைய போலீஸார் எச்சரித்தனர். முகக்கவசம் உடனடியாக அணியுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து ஒலிப்பெருக்கி வாயிலாக கரோனா தடுப்பு நடைமுறைகளை சுட்டிக்காட்டி குறைவான பயணிகளுடன் பேருந்துகளை இயக்குமாறும், தனிமனித இடைவெளியுடன் பயணிகளை இருக்கையில் அமர வைக்குமாறும் அறிவுறுத்தினர்.

பாகூர் பகுதியில் போலீஸார் பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி செலுத்தாவர்களை கண்டறிந்து அவர்களை முகாமுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்