மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை எனில் கூட்டணியில் இருந்து வெளியில் வாருங்கள்; போராட்டம் நடத்துங்கள்: முதல்வர் ரங்கசாமிக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து வெளியில் வாருங்கள். போராட்டம் நடத்துங்கள் என்று முதல்வர் ரங்கசாமிக்கு முன்னாள் முதல்வர் நாரா யணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 137-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வைசியாள் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தி லிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் என எம்பி வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஏழுப்பியதற்கு, ‘மாநில அந்தஸ்து தர முடியாது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுவையை நிதி கமிஷனில் சேர்க்கவும் மறுத்துவிட்டனர். ஆனால் முதல்வர் ரங்கசாமியோ, புதுச்சேரியில் திட்டங்களை நிறை வேற்ற மாநில அந்தஸ்து தேவை என்று கூறியுள்ளார்.

பாஜக கூட்டணி அரசுக்கு, மத்திய பாஜக அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு பெறுவதில் என்ன சிரமம் உள்ளது? இதற்கு முதல்வரும், பாஜக அமைச்சர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி தனது கூட்டணிக்கு அழுத்தம் கொடுத்து, பாஜக தலைவர்களிடம் பேசி மாநில அந்தஸ்து பெறுவதில் அவருக்கு ஏன்ன சிரமம் ஏன்பதை மக்களிடம் விளக்கமாக கூற வேண்டும். மாநில அந்தஸ்து பெற நீங்கள் வெளியில் வந்து தெருவில் இறங்கி போராட்டம் நடத்துங்கள். மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து வெளி யில் வாருங்கள். பதவியை அனுபவித்துக் கொண்டு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை, அதனால் பத்தாயிரம் பேரை வேலைக்கு வைக்க முடியவில்லை என பேசும் கபட நாடகத்தை மக்கள்ஏற்க மாட்டார்கள்” என்று குறிப் பிட்டார்.

இதையடுத்து புதுச்சேரியில் உள்ள காந்தி, காமராஜர், பெரியார்,பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலை களுக்கும் ஊர்வலமாக சென்று காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்