திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க நிதி நிறுவனங்கள் வைத்திருந்த ரூ.72 லட்சம் பறிமுதல்: தேர்தல் நிலை கண்காணிப்பு குழு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தேர்தல் விதிமுறைகளை மீறி திரு வாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு வழங்க நிதி நிறுவனங்கள் வைத்திருந்த ரூ.72.27 லட்சம் ரொக் கம் நேற்று பறிமுதல் செய்யப் பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங் களிலும் தேர்தல் நிலை கண் காணிப்புக் குழு, பறக்கும்படை உள் ளிட்ட குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் புதுத் தெருவில் செயல்பட்டு வரும் சூர்யோ டே மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி, மகளிர் சுய உத விக் குழுக்களுக்கு பணம் வழங்க உள்ளதாக தொலைபேசி தகவல் வந்தது. இதையடுத்து, அந்த இடத் துக்குச் சென்ற தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் அங்கு சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.12.35 லட் சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, திருவாரூர் அருகே புலிவலத்தில் எல் அன் டி ஃபைனான்ஸ் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க விருந்த ரூ.59.92 லட்சத்தையும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.72.27 லட்சம் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலர் முத்துமீனாட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்