சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம்: 2013-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் நிதியுதவி 

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: சாலை விபத்தில் உயிரிழந்த கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு 2013ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் சார்பில் ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 9ம் தேதி இரு சக்கர வாகனத்தில் மற்றொரு காவலருடன் பின்னால் அமர்ந்து வந்தப்போது கரூர் அமராவதி புதிய பாலத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் 2013ம் ஆண்டு காவலராக தேர்வுப்பெற்று பணியில் சேர்ந்தவர். 2013ம் ஆண்டில் 13,000 காவலர்கள் ஒரே சமயத்தில் தேர்வு பெற்றனர். இவர்கள் மாவட்டந்தோறும் 2013ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் என வாட்ஸ்அப் க்ரூப் வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் பேட்ச்சை சேர்ந்த காவலர்கள் உயிரிழந்தால் அந்த பேட்சில் உள்ள மற்ற சக காவலர்களிடம் வாட்ஸ்அப், டெலிக்ராம் மூலம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கடந்த மே மாதம் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் தென்காசியைச் சேர்ந்த மாரிச்சாமி ஆகிய இருவருக்காக இம்மாதம் நிதி திரட்டப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதி இன்று (டிச. 26ம் தேதி) வழங்கப்பட்டது. இதில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் 2013ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் கலந்து கொண்டனர்.

மணிகண்டனின் பெற்றோர், மனைவி அனுஷியா ஆகியோரிடம் தலா ரூ.50,000 ரொக்கம் வழங்கப்பட்டது. ரூ.15 லட்சத்தை இரு குழந்தைகள் பேரில் தலா ரூ7.5 லட்சம் வீதம் ஆயுள் காப்பீடு செய்து அவர்கள் பெரியவர்களானதும் வட்டி, போனஸுடன் வழங்கும் வகையில் முதலீடு செய்து அதற்கான காப்பீட்டு பத்திரம் நேற்று வழங்கப்பட்டது. தென்காசியை சேர்ந்த மாரிச்சாமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

32 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்