தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதையேற்று பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதியான பட்டதாரிகள் மூலம் நிரப்பிக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி பள்ளியின் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுநிலை ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.

ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம்

அத்தகைய முதுநிலை ஆசிரியர்கள் 5 மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மட்டும் பணியில் நீடிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக 5 மாதங்களுக்கு தேவையான ரூ.13.87 கோடி நிதியும் விடுவிக்க ஆணை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

ஓடிடி களம்

15 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்